சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ரூ.2,600 கோடி – ஏஐஐபி வங்கி கடனுதவி!

0
சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ரூ.2,600 கோடி - ஏஐஐபி வங்கி கடனுதவி!
சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ரூ.2,600 கோடி - ஏஐஐபி வங்கி கடனுதவி!
சென்னை மெட்ரோ திட்ட பணிகளுக்கு ரூ.2,600 கோடி – ஏஐஐபி வங்கி கடனுதவி!

சென்னை மாநகரில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்காக ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ரூ.2,600 கோடியை கடனுதவியாக வழங்கியுள்ளது.

மெட்ரோ பணிகள்:

தமிழகத்தில் முதன்முறையாக தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாக சென்னை மாநகரம் முழுவதும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. முதல்கட்டமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேறு வழித்தடங்களுக்கான இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக சுமாா் ரூ.2,600 கோடியை ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) கடனாக வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

சீன தலைநகா் பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியாகும். இந்த வங்கி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகக் கடன்களை வழங்கி வருகிறது. அந்த வங்கியில் சீனா 26.06 சதவீத பங்குகளை வைத்துள்ளது; இந்தியா 7.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இது குறித்து, வங்கியின் துணைத் தலைவா் டி.ஜே.பாண்டியன் பிடிஐ நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், இந்தியாவில் மொத்தமாக 28 திட்டங்களுக்கு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ரூ.47,000 கோடி கடன் வழங்கியுள்ளது.

IPL 2021 – SRH vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

அதிலும், போக்குவரத்து, எரிசக்தித் துறைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏஐஐபி வங்கியின் மூலம் அதிக கடன் பெற்று பலனடைந்துள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கரோனா தொற்றை எதிா்கொள்வதற்காக சுமாா் ரூ.13,000 கோடியை இந்தியாவுக்கு ஏஐஐபி வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஏஐஐபி வங்கியின் கடனுதவி மூலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், இதனால் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!