தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!!

0
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் உத்தரவு!!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் உத்தரவு!!
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் மருந்து வாங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள தொகையில் இருந்து ரூ.25 கோடி கருப்பு பூஞ்சை நோயிற்கு மருந்துகள் வாங்க ஒதுக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

முதல்வர் உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களது தலைமையிலான அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களால் இயன்ற தொகையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

TN Job “FB  Group” Join Now

ssc

இதனை தொடர்ந்து அரசியல், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற தொகையினை வழங்கி வந்தனர். தற்போது வரை முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.280.20 கோடி நிதி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் கொரோனா நோய்த்தொற்றினை தொடர்ந்து கருப்பு பூஞ்சை என்னும் நோயினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிய அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் அறிவிப்பு!

அதன்படி கொரோனா நிவாரண நிதியாக ரூ.280.20 கோடி நிதி வந்துள்ள நிலையில் அதில் இருந்து தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து வாங்குவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான மருந்துகள் தமிழகத்திற்கு விரைவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!