மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 நிதியுதவி – பிரதமர் இன்று வெளியீடு!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 நிதியுதவி - பிரதமர் இன்று வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 நிதியுதவி - பிரதமர் இன்று வெளியீடு!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.2000 நிதியுதவி – பிரதமர் இன்று வெளியீடு!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 11வது தவணைப்பணமான 2000 ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே.31) வெளியிட இருக்கிறார். இந்த திட்டத்திற்கான புதிய பயனாளிகள் பட்டியலை சரிபார்க்கும் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

நிதியுதவி திட்டம்

நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) என்ற திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6000 என்ற அளவில் இதுவரை 10 தவணைகளாக சுமார் 20,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரி 1ம் தேதியன்று 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் 10வது தவணைப்பணம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 11வது தவணைப்பணம் எப்போது கிடைக்குமென்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 11வது தவணை நிதிப் பலன்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 31) வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ஹிமாச்சல் பிரதேசத்தில் நடத்தப்பட்டு வரும் தேசிய நிகழ்வான கரிப் கல்யாண் சம்மேளனத்தின் ஒரு பகுதியாக ஒன்பது மத்திய அமைச்சகங்களால் செயல்படுத்தப்பட்ட 16 திட்டங்கள் மற்றும் அந்த திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட இருக்கிறார்.

B.Sc முடித்தவரா நீங்கள் ? உங்களுக்காக காத்திருக்கும் தமிழக அரசு வேலை !

இந்த நிகழ்வில் PM-KISAN திட்டத்தின் கீழ் தகுதியான ஒவ்வொரு விவசாயிக்கும் 11வது தவணையாக ரூ.2000 பணம் இன்று முதல் கிடைக்க இருக்கிறது. இப்போது PM KISAN 11வது தவணைக்கான பணத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் புதிய பயனாளிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை சரிபார்க்க:

  • முதலில் அதிகாரப்பூர்வ https://pmkisan.gov.in/ இணையதளத்தை திறக்கவும்.
  • பணம் செலுத்துதல் என்ற ஆப்ஷனின் கீழ் இந்தியாவின் வரைபடம் இடம்பெற்றிருக்கும்.
  • வலது புறத்தில், “டாஷ்போர்டு” எனப்படும் மஞ்சள் நிற ஆப்ஷன் இருக்கும்.
  • அதை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
  • இப்போது கிராம டாஷ்போர்டு ஆப்ஷனில் உங்கள் முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்
  • தொடர்ந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுக்கவும்
  • பின்னர் show பொத்தானைக் கிளிக் செய்யவும்
  • இப்போது உங்கள் விவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here