தமிழக ஆவின் ஊழியர்களுக்கு ரூ. 2.70 கோடி பொங்கல் போனஸ் – அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிப்பது குறித்து அமைச்சர் நாசர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதற்காக அரசு ரூ. 2.70 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொங்கல் போனஸ்:
தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆவின் பால் விலை கடந்த டிசம்பர் மாதத்தில் லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.630 ஆக விலை உயர்த்தப்பட்டது. இது போல் ஆவின் பொருட்களின் விலை அனைத்தும் சமீப காலமாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு – அரசாணை வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
அப்போது, ஆவின் நிறுவனத்தில் கோடை காலத்தில் புது வகையிலான ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும் என்றும், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 27,289 நபர்களுக்கு ரூ. 2.70 கோடிக்கு போனஸ் அளிக்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார். இதுபோல், பண்டிகை நாட்களில் கூடுதலாக இனிப்பு வகைகள் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.