தமிழகத்தில் தகுதிவாய்ந்த மகளிருக்கு உரிமைத்தொகை கட்டாயம் கிடைக்கும் – அமைச்சர் உறுதி!
தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
உரிமை தொகை:
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மண்டல அலுவலர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படவில்லை.
செப்.29 காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் – டெல்லியில் ஏற்பாடு!
ஆதார் எண், வங்கி கணக்கு இணைப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவர்களுக்கு வேறு வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தகுந்த கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்டு வருகிறது. அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியதைப் போல் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலும் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு இந்த உரிமை தொகை பயனற்றதாக இருக்கும். மேலும் தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை கட்டாயம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மறு மேல்முறையீட்டு விண்ணப்ப பணிகள் எந்தவித தொய்வு இன்றி சீராக நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.