Super News.. தமிழக மகளிருக்கு மாதம் ரூ.1000.. வங்கி கணக்கு கட்டாயம்? வெளியான தகவல்!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகையை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குடும்ப தலைவிகளுக்கான மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கி கணக்கு
தமிழகத்தில் வருகிற 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்க பணமாக ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரொக்க பரிசு தொகையை ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கவில்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களுக்கு டிச.6 விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
அதன்படி இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக உரிய நபர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுவது உறுதி செய்ய முடியும் என்பதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 தொகையானது விரைவில் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தொகையும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் குடும்ப தலைவிகளும் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழக முதல்வரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.