தமிழக அரசின் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – அப்போ இத பண்ணுங்க முதல்ல!
தமிழகத்தில் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாதவர்கள் உரிய காரணத்தை அறிய விரும்பினால் தங்களின் விண்ணப்பத்தின் நிலை அறிய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பத்தின் நிலை:
தமிழகம் முழுவதுமே கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரூபாய் 1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தகுதி பெற்ற மகளிர் வங்கி கணக்கில் ரூபாய் 1000 உரிமைத் தொகை செலுத்தப்பட தொடங்கியது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப தலைவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஆனால் 57 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணத்துடன் கூடிய எஸ்எம்எஸ் அவர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் அதிக அளவிலானவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த எஸ்எம்எஸ் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இவர்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக அரசு 9952951131 என்ற தொலைபேசி எண்ணிற்கு WhatsApp மூலம் செய்தி அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.
ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தல் விகிதம் 30%மாக குறைப்பு – பட்டதாரிகள் அதிர்ச்சி!
- இந்த நம்பரை மொபைல் போனில் பதிவு செய்து அதில் WhatsApp மூலம் HI என டைப் செய்து அனுப்ப வேண்டும்.
- இப்பொழுது உங்களின் ஸ்மார்ட் கார்டு நம்பரை பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
- இதன் பிறகு உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அல்லது விண்ணப்பம் தகுதி பெற்றதா என்பது குறித்த தகவல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- குறுஞ்செய்தியில் வந்த காரணம் சரியானது அல்ல என்றால் உடனே உங்கள் அருகில் உள்ள இ சேவை மையம் மூலம் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.