இனி மாத துவக்கத்திலேயே ரூ.1000 உரிமைத்தொகை – குடும்ப தலைவிகள் ஹாப்பி!!!
தமிழகத்தில் இனி மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்த திட்டமிட்ட நிலையில் இந்த மாதம் தீபாவளியையொட்டி முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்த ரூ.1000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆதார் பணிகளை இன்னும் முடிக்கவில்லையா? – கால அவகாசம் நீட்டிப்பு!
இதனை, மேலும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.