பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை எப்படி வழங்கப்படும்? – முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பெண்களுக்கான உரிமைத்தொகை செப்டம்பர் 1 முதல் வழங்கப்பட இருக்கும் நிலையில் எப்படி பொதுமக்களுக்கு அந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ரூ.1000 உரிமைத்தொகை
தமிழகத்தில் பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யார் யாருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பை அரசு தற்போது வரைக்கும் வெளியிடாமலேயே இருந்து வருகிறது. மேலும், எதன் மூலமாக இந்த ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வரையிலும் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில் திடீரென அதிகரித்த அரிசி விலை.. காரணம் என்ன? – அதிர்ச்சியில் மக்கள்!
இந்நிலையில், மைக்ரோ ஏடிஎம் மூலமாக விரல் ரேகை டெபிட் கார்டு பயன்படுத்தி உரிமைத்தொகை பணத்தை பெற்றுக்கொள்ளும்படியாக திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான எந்தவித அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகாத காரணத்தினால் விரைவில் அது குறித்தான அறிவிப்பை வெளியிடும்படி பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.