தூக்கத்தை விரும்பும் நபரா நீங்கள்? ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு!

1
தூக்கத்தை விரும்பும் நபரா நீங்கள்? ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு!
தூக்கத்தை விரும்பும் நபரா நீங்கள்? ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு!
தூக்கத்தை விரும்பும் நபரா நீங்கள்? ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு!

பொதுவாக தூங்கிக் கொண்டே இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற முடியாது என பலர் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இப்படி தூங்குபவர்களுக்கு லட்சங்களில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

தூங்குவதற்கு சம்பளம்

கொரோனா நெருக்கடி காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பெரிய விஷயம் என்னவென்றால் நன்றாக சாப்பிடுவது, மற்றொருன்று தூங்குவது. ஏனென்றால் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பலருக்கு தூக்கமின்மை என்பது பழகிப் போய்விட்டது. தூக்கம் முக்கியமானது என்பதையே பலர் மறந்து விட்டனர். இதற்கிடையில் கொரோனா என்கிற பெருந்தொற்று உலகில் உள்ள மொத்த மக்களையும் ஊரடங்கு என்ற கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதனால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பலருக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது தற்போது பழக்கமாகி இருக்கிறது.

தமிழக அரசு ஆசிரியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் திருத்தம்? கோரிக்கை!

இதை விட மற்றொரு ரகத்தை சேர்ந்த மக்கள், வாழ்நாளை தூங்கியே கழித்து கொண்டிருக்கின்றனர். தூங்கி கொண்டே இருப்பது நல்லதல்ல என்றாலும், பலருக்கு தூக்கம் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது. அந்த வகையில் தூக்கத்தை விரும்பும் நபர்களுக்கு லட்ச கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சிறந்த வாய்ப்பை பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வேக்ஃபிட் (wakefit) என்ற நிறுவனம் வழங்குகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பை காண்கையில், தூங்குவதற்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு இண்டர்ன்ஷிப் திட்டம் ஆகும்.

TN Job “FB  Group” Join Now

இந்நிறுவனத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற சீசனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தான் இந்த ஆண்டும், தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. இதை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டியில் அதிகபட்ச சம்பளமாக 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட உள்ளது. அந்த வகையில் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக கிடைக்கும். இது தவிர வெற்றியாளருக்கு ‘India’s Sleep Champion’ என்ற பட்டமும் கொடுக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போட்டிக்கு இதுவரை சுமார் 60,000 பேர் விண்ணப்பங்களை செலுத்தியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!