அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்? பாதுகாப்புத்துறை முக்கிய விளக்கம்!

0
அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்? பாதுகாப்புத்துறை முக்கிய விளக்கம்!
அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்? பாதுகாப்புத்துறை முக்கிய விளக்கம்!
அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு 1 கோடி ரூபாய்? பாதுகாப்புத்துறை முக்கிய விளக்கம்!

இந்தியாவில் ராணுவப் பணிக்கான அக்னிபாத் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் எதிர்த்து வரும் நிலையில் ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் அக்னிபாத் திட்டத்திற்கான காரணத்தை விளக்கி உள்ளார்.

அக்னிபாத்:

இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் அக்னிபாத் எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும், கடைசி, அதாவது 4-வது ஆண்டில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 11.7 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்ப்பட்டு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள். மேலும் அக்னிபாத் திட்டத்தில் கீழ் பணிக்காலத்தில் வீர மரணம் அடையும் அக்னிபாத் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியும், அவர்கள் பணிபுரிந்திருக்க வேண்டிய காலத்துக்கான ஊதியமும் வழங்கப்படும் என்றும் ஏதேனும் விபத்தால் உடல் ஊனமுற்றால் ஊனத்தின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு ரூ.46 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – டிக்கெட் வழங்குவது நிறுத்தம்! போராட்ட எதிரொலி!

இந்த நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து பேசிய ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் உயரமான இடங்களில் பாதுகாப்பு பணியில் வயதானவர்களை ஈடுபடுவதால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுத்து இளைஞர்களை தேர்வு செய்வதற்காகவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒழுக்கம் எங்களின் அடிப்படை, அதனால் ஒழுக்கக்கேடான செயல்களுக்கு அக்னிபாத் திட்டத்தில் இடமில்லை, மேலும் அக்னிபாத்தை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!