தெற்கு ரயில்வே துறையில் ரூ.29,200/- ஊதியத்தில் வேலை – விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தெற்கு ரயில்வே துறையில் ரூ.29,200/- ஊதியத்தில் வேலை - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தெற்கு ரயில்வே துறையில் ரூ.29,200/- ஊதியத்தில் வேலை - விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தெற்கு ரயில்வே துறையில் ரூ.29,200/- ஊதியத்தில் வேலை – விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்..!

விளையாட்டு துறையில் சாதனை படைத்து அரசு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு தெற்கு ரயில்வே துறை (RRCSR) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் விளையாட்டு பிரிவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Railway Recruitment Cell Southern Railway (RRCSR)
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

RRCSR காலிப்பணியிடங்கள்:

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு தெற்கு ரயில்வே துறையில் (RRCSR) விளையாட்டு பிரிவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 05 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Volleyball (Men) – 02
  • Volleyball (Women) – 03
RRCSR கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Volleyball விளையாட்டில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

RRCSR வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RRCSR ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

RRCSR தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RRCSR விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST பிரிவை சேர்ந்தவர்கள், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், உடல் ஊனமுற்றவர்கள், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் போன்றவர்கள் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

RRCSR விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 13.06.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Assistant Personnel Officer,
Railway Recruitment Cell,
Southern Railway,
3rd Floor, No.5, P.V. Cherian Crescent Road,
Egmore, Chennai – 600 008.

RRCSR Notification Link

RRCSR Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!