RRC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு – ஜனவரி 19 ம் தேதி PET தேர்வு!

0
RRC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
RRC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
RRC தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு – ஜனவரி 19 ம் தேதி PET தேர்வு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது RRC நிலை 1 தேர்வுகளுக்கான உடல் தொகுத்து தேர்வுகளை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஜனவரி 19ம் தேதி நடத்த உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

RRC அறிவிப்பு:

RRC நிலை 1 பதவிகளுக்கு கணினி அடிப்படையிலான சோதனை, உடல் திறன் சோதனை (PET) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய 3 நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் நிலையான CBT தேர்வுகள் முன்னதாக நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது வாரியம் அதிகாரபூர்வ தலத்தில் சென்னை Region க்கு உடல் தகுதி தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தேர்வர்கள் www.rrcmas.in என்ற தலத்தில் உள்ள விவரங்களை முழுவதுமாக அறிந்து கொண்டு அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி உடல் தொகுத்து தேர்வு நடைபெறும். மேலும், ஆண்கள் இந்த உடல் தகுதி தேர்வில் 2 நிமிடத்தில் 35 கிலோ எடையை 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி செல்ல கூடியவராகவும், 1000 மீட்டர் தூரத்தை 4 நிமிடம் 15 வினாடிகளில் ஒரே வாய்ப்பில் ஓடக்கூடியவராக இருக்க வேண்டும்.

சென்னை எலக்ட்ரிக் ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி ரயிலில் 12 பெட்டிகள் கட்டாயம்!!

அதேபோல் பெண்கள் 2 நிமிடத்தில் 20 கிலோ எடையை 100 மீட்டர் தூரத்திற்குத் தூக்கி செல்ல கூடியவராகவும், 1000 மீட்டர் தூரத்தை 5 நிமிடம் 40 வினாடிகளில் ஒரே வாய்ப்பில் ஓடக்கூடியவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!