RRB NTPC Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

0
RRB NTPC Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !
RRB NTPC Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

RRB NTPC Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு !

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்பு குறித்த அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடத்திற்கான CBT 1, CBT 2 , Typing Skill Test/Computer Based Aptitude Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு Level 1 ஆகிய தேர்வு முறைகள் முடிவடைந்த நிலையில், தற்போது Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

RRB NTPC Level 2 சான்றிதழ் சரிபார்ப்பு:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்பு குறித்த அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்கட்ட கணினி வழித்தேர்வு (CBT 1), 2ம் கட்ட கணினி வழித்தேர்வு (CBT 2) , Typing Skill Test/Computer Based Aptitude Test, Document Verification & Medical cerification ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அதன்படி இதில் முதல்கட்ட கணினி வழித்தேர்வு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல் 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட கணினி வழித்தேர்வு 2022ம ஆண்டு மே 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, Typing Skill Test/Computer Based Aptitude Test ஆகிய தேர்வுகளும் முடிவடைந்துள்ளது.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட ஆவண சரிபார்ப்பு 14.02.2023 அன்று (காலை 08:00) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரப்பூர்வ எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலமாகவும் (அவர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது) ஆவண சரிபார்ப்பின் தேதி மற்றும் இடம் குறித்து தெரிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட ஆவண சரிபார்ப்பு ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Notice PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!