Royal Enfield Himalayan விலை 2வது முறையாக அதிகரிப்பு – புதிய பட்டியல் இதோ!

0
Royal Enfield Himalayan விலை 2வது முறையாக அதிகரிப்பு - புதிய பட்டியல் இதோ!
Royal Enfield Himalayan விலை 2வது முறையாக அதிகரிப்பு - புதிய பட்டியல் இதோ!
Royal Enfield Himalayan விலை 2வது முறையாக அதிகரிப்பு – புதிய பட்டியல் இதோ!

இந்தியாவில் தயாரிக்கப்படும் விலை உயர்ந்த இருசக்கர வாகன வகைகளில் ஒன்றான ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் தற்போது விலை உயர்வை கண்டுள்ளது. இந்த விலை உயர்வானது கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை உயர்வு

கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் விலை உயர்வை கண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட TVS வாகனத்தின் விலை உயர்வை தொடர்ந்து Royal Enfield வாகனங்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக Royal Enfield நிறுவனத்தின் கிளாசிக் 350 வாகனங்களின் பையர்பால், சூப்பர்நோவா, ஸ்டெல்லர் வகைகள் விலை உயர்வை கண்டது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ICMR அறிக்கை!

இதை தொடர்ந்து ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் விலையும் சுமார் ரூ.5,000 வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் என்ஃபீல்ட் ஹிமாலயன் விலை சுமார் ரூ.4,600 வரை உயர்ந்தது. அந்த வகையில் இவ்வகை வாகனத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்வை கண்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் வகையின் கிராவல் கிரே மற்றும் மிராஜ் சில்வர் போன்ற வண்ணங்களின் விலை ரூ.2,10,784 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்ததாக இரட்டை வண்ணங்களில் கிடைக்கும் ராக் ரெட் மற்றும் லேக் ப்ளூ போன்ற வாகனங்களின் விலை ரூ.2,14,529 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரானைட் பிளாக் மற்றும் பைன் கிரீன் வகைகளின் விலை ரூ.2,18,273 ஆக அதிகரித்துள்ளது. தவிர 2021 ஆம் ஆண்டில் வெளியான ராயல் என்ஃபீல்ட் வாகனத்தின் மாடல் மற்றும் வடிவமைப்பு பெரிய புதுப்பிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டிரிப்பர் நேவிகேஷன் பாட் இணைக்கப்பட்டுள்ளது.

நிலவில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் – சந்திராயன் 2 புதிய கண்டுபிடிப்பு!

இந்த அம்சம் கூகுள் மேப்ஸால் இயக்கப்படுகிறது. மேலும் இவை RE Meteor 350 இல் முதன் முதலாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயனின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஹெட்லைட், காற்று பாதுகாப்புக்காக உயரமான கண்ணாடி, மேம்பட்ட இருக்கை குஷனிங், மெலிதான முன் ரேக், பின்புற லக்கேஜ் கேரியரில் பிளேட் டைப் ஆகிய அம்சங்கள் ஹிமாலயன் வகைகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!