“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலமாக தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரோஷினி. அவர் தற்போது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரோஷினி ஹிந்தி பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ரோஷினி:

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் டாப் சீரியலில் ஒன்றான பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக களமிறங்கி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரோஷினி. இந்த சீரியல் தான் அவருடைய முதல் வாய்ப்பாக இருந்தாலும் தன்னுடைய அழகான தோற்றதால் ஏகப்பட்ட மக்களை கவர்ந்தார். குடும்பப்பாங்கான தோற்றத்தை பார்த்து பலர் தங்கள் வீட்டு பெண்ணாக ரோஷினியை பார்த்தார்கள்.

Exams Daily Mobile App Download

ஆனால் சில மாதங்களுக்கு முன் ரோஷினி சீரியலை விட்டு விலகினார். அவருக்கு அதிகமான சினிமா வாய்ப்புகள் வருவதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ரோஷினி தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய சமையல் திறமையால் ஏகப்பட்ட ரசிகர்களை அவர் கவர்ந்து வருகிறார். ஆனால் கண்ணம்மாவாக அவரை சீரியலில் பார்க்க முடியவில்லை என வருத்தப்படுகின்றனர்.

பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கும் ராதிகா, கோவப்பட்ட கோபி – “மகா சங்கமம்” சீரியலில் இனி வருபவை!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஷினி, அவ்வப்போது பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அவர் ரியாக்சன் கொடுக்க அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் நடிப்பு மட்டுமல்லாமல் சமையலிலும் கலக்கி வரும் ரோஷினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!