‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக மீண்டும் களமிறங்கும் ரோஷினி? சிறப்பு எபிசோடு! ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரோஷினி மீண்டுமாக இந்த சீரியலில் இணைய இருப்பதாகவும், இது 3.30 மணி நேர சிறப்பு எபிசோடாக வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா

மக்களின் பேராதரவுடன் தற்போது 650 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் ஏறத்தாழ 3 ஆண்டுகளாக வெளியாகி வரும் இந்த சீரியல் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டாப் இடத்தை பிடித்து வருகிறது. இப்படி இருக்க இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரோஷினி திடீரென இந்த சீரியலை விட்டு விலக, இவருக்கு பதிலாக வினுஷா என்பவர் இத்தொடரில் நடித்து வருகிறார்.

Vijay TV Bigg Boss 5 Promo | முதல் இடத்திற்கு சண்டையிடும் சிபி & நிரூப்!

இவரும் நடிகை ரோஷினியை போலவே ஜாடையை பெற்றிருப்பதால், அவரை போலவே சிரித்து, முறைத்து என பல்வேறு முக பாவனைகளை வெளிப்படுத்தி கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் ஸ்கோர் செய்து வருகிறார். தவிர பாரதியுடன் புதிய கண்ணம்மாவாக, நடிகை வினுஷா நடித்து வரும் காட்சிகள் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் டிச.14ம் தேதியன்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒரு சிறப்பு எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் – பொங்கல் பரிசு! அதிகாரிகள் தகவல்!

இது தொடர்பான ப்ரோமோவில் நடிகை ரோஷினி தான் கண்ணம்மாவாக வரவிருக்கிறார் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் டிச.14ம் தேதியன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தொடர்ந்து 3.30 மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக இருக்கிறதாகவும், இந்த சிறப்பு எபிசோடில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடிக்க இருப்பதாகவும் வெளியான ப்ரோமோவில் சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது. இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here