ரோஷினி நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ புதிய சீரியல் அறிமுகம்? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
தற்போது விஜய் டிவியில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ என்ற புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய சீரியல்
தமிழ் சின்னத்திரை தொடர்களில் முன்னணி இடத்தை வகித்து வரும் விஜய், சன், ஜீ தமிழ், கலர்ஸ் ஆகிய சேனல்கள் பல புதிய சீரியல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக புத்தம் புதிய சீரியல்களின் அணி வகுப்பு தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதங்களில் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘முத்தழகு’ ஆகிய புதிய சீரியல்கள் மேட்னி நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ அகிலனுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
இதில் நடிகை பவித்ரா மற்றும் நடிகர் வினோத் பாபு நடிப்பில் வெளியாகி வரும் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியல் அதிகப்படியான மக்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இதற்கிடையில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற பெயரில் புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பான ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீரியல் வரும் டிச.20ம் தேதி முதல் மாலை நேர நெடுந்தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.
விறுவிறுப்பான காட்சிகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சீசன் 2 – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இது தவிர மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜ பார்வை’ சீரியலும் தற்போது முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் சித்துவின் நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் எவ்விதத்தில் உண்மை என்பது இதுவரை தெரியாத பட்சத்தில் இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.