விஜய் டிவியில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவியில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் - ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

திரைப்பட வாய்ப்பின் காரணமாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சீரியலை விட்டு விலகினார். தற்போது ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ரோஷினி. இவரது நடிப்பு பல முன்னணி திரைப்பட நடிகையையே மிஞ்சிவிடும். இவருக்கு ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து கொண்டிருந்த காரணத்தால் இந்த படவாய்ப்பை இழந்தார். திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதால் ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார். சீரியலை விட்டு ரோஷினி சென்ற பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் முற்றிலுமாக களை இழந்து காணப்பட்டது. ரசிகர்கள் பலரும் மீண்டும் சீரியலில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

கோலத்தை அழித்து ஐஸ்வர்யாவிடம் தானாகவே சென்று சிக்கும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோடு!

மக்களின் விருப்பத்தின் பேரில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரோஷினி அளவுக்கு இவரின் நடிப்பு இல்லையென்று பலரும் குற்றச்சாட்டை வைத்தனர். ஆனால் நாளடைவில் வினுஷாதேவியையும் மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ரோஷினி முழுக்க முழுக்க வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.

எதிரிகளை கொலை செய்தால் 300 டாலர் பரிசு – ராணுவ டாங்கிகளுக்கு 2,50,000! உக்ரைன் அதிரடி அறிவிப்பு!

ரோஷினி மீண்டும் இந்த பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களின் விருப்பத்தின் பேரில் பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்டு ரசிகர்களும் தலை கால் புரியாமல் மகிழ்ச்சியில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!