மீண்டும் கண்ணம்மாவாக அறிமுகமாகும் ரோஷினி – குஷியில் ரசிகர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா தொடரில் பழைய கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் ரோஷினி சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது தான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அடிக்கடி பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள். எப்போது தான் பாரதிக்கு கண்ணம்மாவை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது விக்ரம் சென்னையில் புதிதாக ஒரு மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார். பாரதியை போல விக்ரமிற்கும் சமூக நலனில் ஆர்வம் இருக்கிறது. மேலும் பல ஊர்களில் இலவச முகாம் வைத்து நடத்தி வருகிறார்.
விஜய் டிவி ரக்ஷன் மனைவி மகள் பற்றி வெளியே சொல்லாமல் இருக்க காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!
இதனால் பாரதிக்கு தற்போது சிறந்த மனிதநேய மருத்துவர் என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விருதை பாரதி, லட்சுமி மற்றும் ஹேமாவின் கையால் தான் வாங்கியுள்ளார். என்ன தான் பாரதி தன்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் லட்சுமி, ஹேமா மீது அதிக பாசம் வைத்திருக்கிறார் என கண்ணம்மா பெருமைப்படுகிறார். தற்போது விக்ரம் துவங்கியுள்ள புது மருத்துவமனையில் பாரதி தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக சேர்ந்துள்ளார்.
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே” நடிகர் திரவியத்திற்கு கிடைத்த வாய்ப்பு – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அதே மருத்துவமனையில் தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீசராக பணியில் சேர்ந்துள்ளார். கண்ணம்மாவுடன் தான் சேர்ந்து பணியாற்ற வேண்டுமா என பாரதி கடுப்பாகிறார். இதற்கு பிறகு கண்ணம்மாவை புரிந்து கொள்ள பாரதிக்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது. இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே பழைய கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி மீண்டும் சீரியலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஷினி சீரியலில் இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.