கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ – பல ஆயிரம் கோடிகள் இழப்பு!

0
கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ - பல ஆயிரம் கோடிகள் இழப்பு!
கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ - பல ஆயிரம் கோடிகள் இழப்பு!
கோகோ-கோலாவை துவம்சம் செய்த ரொனால்டோ – பல ஆயிரம் கோடிகள் இழப்பு!

பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு அருகே இருந்த கோகோ-கோலா பாட்டிலை அகற்றிவிட்டு அதற்கு பதில் தண்ணீர் பாட்டிலை வைத்தார். அவரது செயலால் தற்போது கோகோ-கோலாவின் வணிக சந்தை நிலவரம் கடும் சரிவை கண்டு வருகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ:

கால்பந்தாட்ட போட்டியில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது அதிரடி ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருவர். அந்த அளவிற்கு தனது ஆட்டம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் ரொனால்டோ. இவர் விளையாட்டை தொடர்ந்து சமூக நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார், அவ்வப்போது துரித உணவுகளுக்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து வருவார்.

தமிழகத்தில் 10 ம் வகுப்பிற்கு மார்க் இல்லாமல் மதிப்பெண் சான்றிதழ் – அரசு திட்டம்!!

அந்த வகையில் தற்போது அவர் செய்த ஓர் செயல் கோகோ-கோலா நிறுவனத்தின் வணிக சந்தையை கடுமையாக தாக்கி உள்ளது. அதன்படி யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அருகே கோகோ-கோலா பாட்டில்கள் 2 இருந்தது. அதை பார்த்த ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை நீக்கி அந்த இடத்தில் தண்ணீர் பாட்டிலை வைத்தார். இது அனைவரையும் சற்று வியக்க வைத்தது.

இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசு வெளியீடு!!

யூரோ 2020 ஸ்பான்சரில் கோகோ-கோலா நிறுவனம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது செயலை தொடர்ந்து கோகோ-கோலா நிறுவனம் பங்கு சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவை கண்டு வருகிறது. பங்குச்சந்தை தொடக்கத்தில் கோகோ-கோலா நிறுவன பங்குகளின் மதிப்பு 242 பில்லியன் டாலராக இருந்த நிலையில் சில நிமிடங்களில் 4 பில்லியன் டாலர் சரிவை கண்டது. இது மொத்த மதிப்பில் சுமார் 1.6 சதவிகிதம் ஆகும். மேலும் இந்திய மதிப்பில் சுமார் 29,337 கோடி கோகோ-கோலா நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!