சன் டிவி “ரோஜா” சீரியலில் வரும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுனை தொடரும் பழைய பகை !

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியலில் வரும் அடுத்த ட்விஸ்ட் - அர்ஜுனை தொடரும் பழைய பகை !
சன் டிவி “ரோஜா” சீரியலில் வரும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுனை தொடரும் பழைய பகை !

சன் டிவி “ரோஜா” சீரியலில் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் சீரியலில் பல புதிய கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ரோஜா சீரியல் ப்ரோமோ:

தமிழ் சின்னத்திரையில் பல டாப் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 1000 எபிசோடுகளை கடந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சன் டிவி “ரோஜா” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. ரோஜா சீரியலின் கதை சிம்பிளாக இரண்டே வரியில் முடிந்துவிடும் ஆனால் அப்படி இல்லாமல் 1000 எபிசோடுகளை கடந்து சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த வீட்டு பேத்தி என்று சொல்லி வந்த அணு இந்த வீட்டு பேத்தி இல்லை என்று நிருப்பிக்க எடுக்கும் பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிகிறது.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் சுனிதாவை தாறுமாறாக கலாய்த்த புகழ் – வைரலாகும் வீடியோ!

இருந்தாலும் அனுவின் நடவடிக்கைகள் குடும்பத்திற்கே சந்தேகம் வர அவர் இந்த வீட்டு வாரிசு இல்லை என தெரிய வந்துள்ளது. இப்படி இருக்க ரோஜா அனு இருவரையும் கொல்ல புதுசா ஒரு வில்லி வந்துள்ளார்.ஆனால் அவரின் கோபம் அனைத்தும் அண்ணப்பூரணியின் பேத்தி மேல் தான் இருக்கிறது. ஆனால் இப்போது அண்ணப்பூரணியின் பேத்தி பெயரில் இருக்கும் அனுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த எல்லா உண்மைகளும் தெரிந்த அர்ஜுன் அணுவை பழி வாங்க நினைக்கிறார். ஆனால் இதை தெரிந்துகொண்ட அனு அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது புதிது புதிதாக கேரக்டர்கள் என்டரி ஆகி வருகின்றன.

மருத்துவமனையில் கால் வலியால் துடிக்கும் “பிக்பாஸ் அமீர்” – வைரல் வீடியோ! ரசிகர்கள் வேண்டுதல்!

முன்னதாக ஒரு கர்ப்பிணி பெண் அவரது கணவரை கொன்றுவிட்டதாக கூறி வழக்கு தொடர அதை அர்ஜுன் எடுத்து நடத்துகிறார். அதில் அர்ஜுன் வெற்றி பெற அப்போது ஒரு பெரிய வக்கீல் அர்ஜுன் மீது கோவமாக இருக்கிறார். இப்போது அதே பெண் குழந்தையுடன் கூட்டி வந்துள்ளனர். இதை பார்த்த யசோதா பொங்கி பேசும்போதுஅவளை ரோஜா கண்ணால் பார்த்து மிரட்டுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரோஜா மீண்டும் சிக்கலில் மாட்ட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here