இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ – அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பிக்கும் செண்பகம்!

0
இன்றைய
இன்றைய "ரோஜா" சீரியல் ப்ரோமோ - அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பிக்கும் செண்பகம்!
இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ – அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பிக்கும் செண்பகம்!

சன் டிவி “ரோஜா” சீரியலில் இன்று அடைத்து வைத்துள்ள இடத்தில் இருந்து செண்பகம் தப்பித்து, அங்கிருந்து போன் செய்கிறார். அந்த போனை அனு எடுத்து அங்கே வருகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

சன் டிவி ரோஜா சீரியலில், ரோஜா நான் செண்பகத்தின் அம்மா என நிரூபிக்க பரிகாரம் செய்ய உள்ளதாக குடும்பத்தில் இருப்பவர்களிடம் சவால் விடுகிறார். இந்த பரிகாரத்தை முடிப்பது மூலமாக நான் தான் செண்பகத்தின் மகள் என உறுதியாக தெரிந்து விடும் என நினைக்கிறார். உடனே அனு நானும் இந்த பரிகாரத்தை செய்ய உள்ளதாக தெரிவிக்கிறார். நீ எப்படி கடைசி வரை தாக்கு பிடிக்கிறாய் என்பதை பார்க்குறேன் என ரோஜா சொல்கிறார்.

தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் இன்றைய எபிசோடில் செண்பகம் மந்திரவாதியை பார்க்க சென்ற இடத்தில் அவர் மயங்கி விழுகிறார். தற்போது கண் முழித்து பார்க்கும் போது ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கிறார். கட்டுகளை அவிழ்த்து கொண்டு தப்பித்து செல்ல நினைக்க அங்கே ஒரு போன் இருக்கிறது. அதை கஷ்டப்பட்டு எடுக்கிறார். அதை எடுத்து போன் செய்ய அங்கே அனு போன் பேசிக்கொண்டே வருகிறார். ஒருவன் செண்பகத்தை பிடிக்க செல்ல அவனை கோபத்தில் அடித்து தள்ளி விடுகிறார்.

சன் டிவி சீரியலில் இருந்து விலகிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகர் – இனி இவருக்கு பதில் இவர்!

பின்னர் பாலு மற்றும் யசோதா சேர்ந்து பாலில் தூக்க மாத்திரைகளை போடுகின்றனர். அதை எப்படியாவது ரோஜாவை குடிக்க வைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர். அர்ஜுன் அம்மா அந்த பாலை ரோஜாவிடம் கொடுக்கிறார். அங்கே அர்ஜுனும் இருக்கிறார். ரோஜா சந்தோசத்துடன் வாங்கி குடிக்க செல்கிறார். இப்படி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இவ்வாறு பிரச்சனை வருவதும் அதில் இருந்து ரோஜா தப்பிப்பதும் வழக்கமாக நடப்பது தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!