செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் – வெளியான ப்ரோமோ!

0
செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் - வெளியான ப்ரோமோ!
செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் - வெளியான ப்ரோமோ!
செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் – வெளியான ப்ரோமோ!

சன் டிவியில் முன்னணி சீரியலான ரோஜாவில் (நாளை) ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சிறப்பு ஒளிபரப்பு நடைபெற உள்ளது. அது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல் ப்ரோமோ:

சன் டிவியில் TRP யில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ரோஜா சீரியலில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ரோஜா சீரியல் மற்றும் தாயே உனக்காக இணைந்து ஒரு மணி நேரம் சிறப்பு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் நடக்க உள்ள எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. பாட்டி ரோஜாவை யாரும் இல்லாதவள் என சொல்ல கோவப்பட்ட ரோஜா நான் தான் செண்பகத்தின் மகள் என சொல்கிறார்.

ஆண் குழந்தைக்கு தாயான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை – அவரது கணவர் வெளியிட்ட பதிவு!

ஆனால் யாரும் அதை நம்பாமல் இருக்க, செண்பகம் என் அம்மா தான் என உறுதி செய்ய நான் கடுமையான பரிகாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அனுவும் பரிகாரம் செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அனுவால் கடைசி வரை தாக்கு பிடிக்க முடியாது என ரோஜா சவால் விடுகிறார். இந்நிலையில் நாளை பரிகாரம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதில் ஒரு சாமியார் வருகிறார். அவருக்கு செண்பகத்தின் குழந்தை யார் என தெரியும் என்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் ஆபத்தான முறையில் போட்டோஷூட் – குவியும் லைக்ஸ்!

அனு ரோஜாவின் முன்னாள் வந்து சொடக்கு போட்டு, நீயே ஒரு ஆதரவு இல்லாதவள் என சொல்ல, நான் DNA டெஸ்ட் எடுக்க செல்லும் போது ஏதாவது செய்து என்னை தடுப்பது நீ தான் என ரோஜா சொல்கிறார். இந்த பரிகாரம் முடித்து செண்பகம் வாயால் நான் தான் அவரது மகள் என சொல்ல வைக்கிறேன் என சொல்கிறார். அப்போது கை தட்டிக் கொண்டே அர்ஜுன் வருகிறார். அப்படி சொல்லு என் செல்லக்குட்டி என சொல்கிறார். செண்பகம் அத்தையின் பொண்ணு ரோஜா தான் என நிரூபிக்காமல் நான் தூங்க மாட்டேன் என அர்ஜுன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!