சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாம்லி தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

0
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை ஷாம்லி தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகை ஷாம்லி தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் வாழ்த்து!
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாம்லி தனது குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

சன்டிவியின் ரோஜா சீரியலில் முதலில் வில்லியாக நடித்து வந்த ஷாம்லி தற்போது தன் பெண் குழந்தையின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஷாம்லி:

சன்டிவியில் கடந்த சில வருடங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் மற்றும் அதிக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருப்பது ரோஜா தான். இதில் கதாநாயகியாக ப்ரியங்கா நல்காரி நடித்து வருகிறார். கதாநாயகன் அர்ஜுன் வேடத்தில் சுப்பு நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் வடிவுக்கரசி, காயத்திரி மற்றும் ஷர்மிளா போன்ற பலரும் நடிக்கிறார்கள். இதனால் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளியில் வரும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!

இந்த சீரியலில் வில்லியாக நடித்து அசத்தியவர் ஷாம்லி. இவர் பல வருடங்களாக பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஆனால் இந்த அளவு பிரபலமடைந்தது ரோஜா மூலம் தான். சிறு வயதில் காணாமல் போன பேத்தி தான் தான் என்று அனு வேடத்தில் நடிக்கும் ஷாம்லி செய்து வந்த வில்லத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் உண்மையில் தான் ரோஜா தான் இவர்களின் பேத்தி. இதனை நிரூபிக்க விடாமல் அனு பல குளறுபடிகளை செய்து வருவார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் மற்றொரு முக்கிய நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில், ஷாம்லி தனது முதல் குழந்தையை கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகி விட்டார். ஷாம்லிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இவரது குழந்தையின் பதிவை ஷாம்லி முதன் முறையாக வெளியிட்டுள்ளார். அதில், அழகாக அவரது மகள் சிரித்து விளையாடுகிறார். ரியா என்று குழந்தைக்கு பெயர் சூட்டி உள்ளார் ஷாம்லி. இதனை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகிறர்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!