கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!

0
கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் - புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீரியல்!
கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் - புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீரியல்!
கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!

தற்போது வெண்பாவிற்கு மாப்பிள்ளையாக ரோஹித் என்கிற புதிய கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரியாகி உள்ளது. ரோஹித் கதாபாத்திரமும் கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் படியான ப் ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது பாரதியை எப்படியாவது கண்ணம்மாவிடம் இருந்து பிரித்து பாரதியை திருமணம் செய்தே தீரவேண்டும் என வெண்பா தீவிரமாக இருந்தார். ஆனால், இடையிலேயே சீரியலில் ஷர்மிளா என்கிற கதாபாத்திரம் அறிமுகமாகி வெண்பாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அடுக்கடுக்காய் பல மாப்பிள்ளைகளை வெண்பாவிற்காக இறக்கி கொண்டிருக்கிறார். ஆனாலும், வெண்பா ஏதாவது சாக்கு சொல்லி வரும் மாப்பிள்ளையை எல்லாம் ஓட வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவே பாரதியையும் கண்ணம்மாவையும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஹேமா திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். லட்சுமிக்கும் தன்னுடைய அப்பா பாரதி தான் என்கிற உண்மை தெரியும் என்பதன் காரணமாக பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர வேண்டுமென லட்சுமியும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

நடிகை ஆலியா பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குடும்பத்தினர் – வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே பாரதிகண்ணம்மா தொடரில் ஷர்மிளா மற்றும் விக்ரம் 2 முக்கிய கதாபாத்திரங்கள் என்ட்ரி ஆகி இருந்த நிலையில் தற்போது ரோஹித் என்னும் கதாபாத்திரமும் எண்ட்ரியாகியுள்ளது. அதாவது வெண்பாவிடம் சில ரவுடிகள் கையை பிடித்து கலாட்டா செய்யும் நேரத்தில் சரியாக ரோஹித் அங்கு வந்து வெண்பாவை காப்பாற்றுகிறார். உடனே வெண்பா தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என அழைக்க ரோஹித் வெண்பாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது சர்மிளா வெண்பாவிடம் இதுதான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என வெண்பாவிற்கே ஷாக் கொடுக்கிறார். தற்போது கண்ணம்மாவிற்கு ரோஹித் வில்லனாக வரும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here