இந்திய அணியில் இருந்து நான் விலக வேண்டுமா? ரோஹித் சர்மா காட்டம்!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டிஸ் அணி உடன் இணைந்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கும் நிலையில் அதில் இளம் வீரர்கள் களமிறங்கியது குறித்து கேள்விக்கு கேப்டன் ரோஹித் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணி:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டிஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6, 9, 12 ஆகிய தேதிகளில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.
‘பாம்புப்பிடி’ மன்னன் வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றமா? மருத்துவரின் விளக்கம்!
இந்நிலையில் ஒரு நாள் தொடருக்கு அகமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட் ஷ்ரேயஸ் ஐயர், சைனி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ் , மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பிப். 14 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம் – மாநில அரசு உத்தரவு!
அணியில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், உங்களுக்கு இஷான் கிஷானும் ருதுராஜ் கெயிக்வாடும் தொடக்க வீரர்களாக இருக்க வேண்டும் என்றால் நானும் ஷிகர் தவானும் அணியில் இருந்து வெளியேற வேண்டுமா என சொல்லி சிரித்தார். இளம் வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பளிக்கப்படும் என்றார்.