மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஷாக் – ரோஹித் சர்மாவுக்கு தடை? இதற்காக தான்!

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஷாக் - ரோஹித் சர்மாவுக்கு தடை? இதற்காக தான்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஷாக் - ரோஹித் சர்மாவுக்கு தடை? இதற்காக தான்!
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்களுக்கு ஷாக் – ரோஹித் சர்மாவுக்கு தடை? இதற்காக தான்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சின் போது தேவையான காலக்கெடுவில் 20 ஓவர்களை முடிக்காத குற்றத்தை மூன்றாவது முறையாக மீண்டும் செய்தால், ரோஹித் ஷர்மாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் மும்பை இந்தியன்ஸ் (MI) இந்த சீசனில் நடைபெற்ற 5 ஆட்டங்களில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த வகையில் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இப்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. இந்த தோல்வியானது MI அணி வீரர்களையும், ரசிகர்களையும் பாதித்துள்ள நிலையில் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த அடியாக IPL வாரியத்தில் இருந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் – இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!

அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியன் பிரீமியர் லீக்கின் தற்போதைய சீசனில் தேவையான ஓவர் ரேட்டைப் பராமரிக்கத் தவறினால், ஒரு போட்டி தடையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசும் போது கொடுக்கப்பட்ட காலத்தை விட அதிக நேரம் எடுத்துகொண்டதால் 2 முறை எச்சரிப்புக்கு உள்ளாகி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தவிர, நேற்றைய ஆட்டத்திலும் மெதுவாக பந்து வீசிய MI அணியின் பிளேயிங் 11 அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கேப்டன் ரோஹித்துக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போல ஏற்கனவே, தேவையான காலக்கெடுவில் 20 ஓவர்களை முடிக்கவில்லை என்பதால் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான மோதலுக்குப் பிறகு ரோஹித் ஷர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மும்பை அணி மூன்றாவது முறையாக இதே குற்றத்தை மீண்டும் செய்தால், ரோஹித்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐபிஎல் விதித்துள்ள அதிகாரப்பூர்வ விதிகளின்படி ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்போது IPL போட்டிகளில் மினிமம் ஓவர் ரேட் தேவைகள் குறித்த அதிகாரபூர்வ விதிகளின் படி, பந்துவீச்சு அணியின் கேப்டனாக ஒரு சீசனில் ஒவ்வொரு குற்றங்களுக்கும், கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலை 3 முறை தொடர்ந்தால் அந்த அணி அடுத்த லீக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் வீழ்ந்ததால், இது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸுக்கு ஐந்தாவது தொடர்ச்சியான தோல்வியாக மாறி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!