கண்ணம்மாவை காப்பாற்றும் ரோஹித், ஹேமா அறிந்து கொள்ளும் உண்மை – இன்றைய எபிசோடு!

0
கண்ணம்மாவை காப்பாற்றும் ரோஹித், ஹேமா அறிந்து கொள்ளும் உண்மை - இன்றைய எபிசோடு!
கண்ணம்மாவை காப்பாற்றும் ரோஹித், ஹேமா அறிந்து கொள்ளும் உண்மை - இன்றைய எபிசோடு!
கண்ணம்மாவை காப்பாற்றும் ரோஹித், ஹேமா அறிந்து கொள்ளும் உண்மை – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவின் சதியால் கண்ணம்மாவுக்கு நடக்க இருந்த விபத்தில் இருந்து அவரை காப்பாற்றுகிறார் ரோஹித். மறுபக்கத்தில், கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்ற சந்தேகம் ஹேமாவுக்கு வருகிறது.

பாரதி கண்ணம்மா

மருத்துவமனையில் நடந்த ஏகப்பட்ட களேபரங்களுக்கு பிறகு இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், வெண்பாவுக்கு தான் செய்த உதவியை பற்றி பேசி அவரை வெறுப்பேற்றுகிறார் ரோஹித். தொடர்ந்து அன்றைய நாளிதழில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பேட்டி தொடர்பான செய்தி ஒன்று வெளியாக அதனை வெண்பாவிடம் வாசித்து காட்டுகிறார் அவர். இப்போது செய்தித்தாளில் பாரதி, கண்ணம்மா இருவரையும் ஜோடியாக பார்க்கும் வெண்பாவுக்கு வயிறு எரிகிறது. இதில் கூடுதலாக எண்ணெய் ஊற்றும் விதமாக பாரதி, கண்ணம்மா இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் என்று சொல்லி வெண்பாவை கூடுதலாக கடுப்பாக்குகிறார் ரோஹித்.

Exams Daily Mobile App Download

ஆனால், கண்ணம்மாவை பழிவாங்க நினைக்கும் வெண்பா, அவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய திட்டமிடுகிறார். மறுபக்கத்தில், காரில் வந்து கொண்டிருக்கும் சௌந்தர்யாவிடம் என் அம்மா பேர் கண்ணம்மாவா, அவர் என்னை மாதிரி இருப்பாரா என்று ஹேமா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஆனால், உன் அம்மா பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று சௌந்தர்யா பேச்சை மாத்துகிறார். பிறகு கோபப்படும் ஹேமாவை சமாதானப்படுத்த ஐஸ்கிரீம் வாங்க செல்கிறார் சௌந்தர்யா. தொடர்ந்து கண்ணம்மாவை கொல்வதற்காக ஸ்பாட்டுக்கு வரும் வெண்பா தான் ஏற்பாடு செய்த லாரி டிரைவரிடம் விவரங்களை சொல்கிறார்.

கோபியின் காதலி ராதிகா என்ற உண்மையை கூறும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – இன்றைய எபிசோடு!

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணம்மா போனில் பேசிக்கொண்டு அந்த வழியாக வர, அந்த லாரி ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சனை கொடுக்கிறது. தொடர்ந்து ஒரு வழியாக லாரி கிளம்ப, கண்ணம்மா சாகப்போகிறாள் என்று வெண்பா சந்தோஷப்படுகிறார். அப்போது, கண்ணம்மா நடந்து வருவதை காரில் இருந்து பார்க்கும் ஹேமா, அவருக்கு பின்னால் வரும் லாரியை கவனிக்கிறார். உடனே சமையல் அம்மா என்று சொல்லி அவரை கூப்பிட்டு கொண்டிருக்க, அங்கு வரும் சௌந்தர்யா பதட்டத்தில் கண்ணம்மாவை பெயர் சொல்லி கூப்பிடுகிறார்.

அதை எதையும் கவனிக்காமல் போனில் பேசிக்கொண்டு வரும் கண்ணம்மாவை எங்கிருந்தோ வரும் ரோஹித் காப்பாற்றுகிறார். இப்போது இந்த கோமாளி எங்கிருந்து வந்தான். கடைசி நேரத்தில் இப்படி எல்லாத்தையும் கெடுத்து விட்டான் என்று வெண்பா புலம்பி விட்டு அங்கிருந்து செல்கிறார். மறுபக்கத்தில் எல்லாரும் கண்ணம்மாவை பெயர் சொல்லி கூப்பிடுவதை கேட்கும் ஹேமா ஒருவேளை இவர் தான் தன்னுடைய அம்மாவா என்று யோசிக்கிறார். தொடர்ந்து, ஆட்டோ வந்ததும் அங்கிருந்து கிளம்பும் கண்ணம்மாவை ஹேமா வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here