சந்திராயன் விண்கலத்தின் ராக்கெட் பாகங்கள் – சற்றுமுன் வெளியான தகவல்!
சந்திராயன் விண்கலத்தின் ராக்கெட் பாகங்கள் தற்போது பூமியில் விழுந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
சந்திராயன் 3:
முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரன் -3 விண்கலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி 2023 அன்று ஏவப்பட்டது. ஆகஸ்டு 23ஆம் தேதி மாலை நிலவில் தரை இறங்கியது. இதுவரையிலும் யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கத்தோடு சந்திராயன் விண்கலம் ஏவப்பட்டது.
சிலிண்டருக்கு ரூ.450 மானியம்…2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை – வெளியான தேர்தல் அறிக்கை!
ஆய்வுகளின் படி தென் துருவப் பகுதியில் அதிக அளவு பனிக்கட்டிகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்திராயன் 3 விண்கலத்தின் ராக்கெட் பாகங்கள் தற்போது பூமியில் வடக்கு பசுபிக் கடல் பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களுக்கு பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.