பட்டதாரிகளுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு – 90+ காலிப்பணியிடங்கள் || ரூ.14,000/- ஊதியம்!
ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (RITES) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கு என மொத்தமாக 91 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Rail India Technical and Economic Service Limited (RITES) |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 91 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RITES காலிப்பணியிடங்கள்:
ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட்டில் (RITES) காலியாக உள்ள Apprentice பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 91 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Graduate Apprentice – 72
- Diploma Apprentice – 10
- Trade Apprentice (ITI Pass) – 09
Exams Daily Mobile App Download
Apprentice கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Graduate Apprentice – B.E, B.Tech, BA, BBA, B.Com
- Diploma Apprentice – Engineering பாடப்பிரிவில் Diploma
- Trade Apprentice (ITI Pass) – ITI
Apprentice வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Apprentice ஊதியம்:
- Graduate Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Trade Apprentice (ITI Pass) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ. 10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
RITES தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 31.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.