இந்தியாவில் அதிகரிக்கும் கோடை வெப்பம் – 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

0
இந்தியாவில் அதிகரிக்கும் கோடை வெப்பம் - 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் கோடை வெப்பம் - 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் கோடை வெப்பம் – 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 7 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை:

இந்தியாவில் பருவநிலை மாற்றம் அவ்வப்போது கால நிலைக்கு ஏற்ப மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கோடை காலம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட சூரிய வெயில் சுட்டெரிக்கும். இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சம் கொண்டு வீடுகளிலேயே முடங்குகின்றனர்.

Exams Daily Mobile App Download

தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் பள்ளிக்கு வருவதில் மனதளவில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் பகுதி நேரமாக பள்ளிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – கிடுக்கிப்பிடி உத்தரவு!

தற்போது கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்து வருவதை அடுத்து மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here