அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை – ஜிஎஸ்டி வரி உயர்வு!

0
அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை - ஜிஎஸ்டி வரி உயர்வு!
அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை - ஜிஎஸ்டி வரி உயர்வு!
அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை – ஜிஎஸ்டி வரி உயர்வு!

மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமலையில் நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்ற நிலையில் ஜிஎஸ்டி வரி குறிப்பிட்ட பொருட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி உயர்வு:

ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக வரி, இது இந்தியாவில் கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல மறைமுக வரிகளை மாற்றியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 மார்ச் 29 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2017 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ், விற்பனையின் ஒவ்வொரு கட்டத்திலும் வரி விதிக்கப்படுகிறது. உள்-மாநில விற்பனையைப் பொறுத்தவரை, மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கிடையிலான விற்பனையும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிக்கு விதிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், உதவித்தொகை – சூப்பர் அறிவிப்பு!

இதனால் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், நாட்டின் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதை பற்றிய விவாதம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதம் பல பொருட்களுக்கு மாற்றியமைக்கபட்டுள்ளது. அதன்படி, பேனாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அட்டை பேட்டிகள், பைகள், பேக்கிங் கண்டைனர்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு 12% ல் இருந்து தற்போது 18% ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தூய மருதாணி பவுடர், ஸ்விக்கி, சோமேடோ உணவுகள் போன்றவற்றிற்கு 5% வரி உயர்த்தப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய், இரும்பு, காப்பர். அலுமினியம் ஆகியவற்றிற்கு 5% லிருந்து 18% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கருவிகள். உதிரி பாகங்கள் 5% லிருந்து 12% ஆகவும், நறுமண இனிப்பு பாக்கு 18% வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், கார்பனேட் குளிர்பானங்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும், 12% செஸ் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here