இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம் – பணவீக்கம் எதிரொலி! முழு விவரம் இதோ!

0
இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம் - பணவீக்கம் எதிரொலி! முழு விவரம் இதோ!
இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம் - பணவீக்கம் எதிரொலி! முழு விவரம் இதோ!
இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம் – பணவீக்கம் எதிரொலி! முழு விவரம் இதோ!

இந்தியாவில் பணவீக்கம் காரணமாக கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் பல வங்கிகளில் கடன்கள் மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வட்டி விகிதம் அதிகரிப்பு:

இந்தியா முழுக்க தேசிய பணவீக்க விகிதம் 7.8 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இது நாட்டின் மோசமான பணவீக்கங்களில் ஒன்றாகும். உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா பரவல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கிகளில் கடன்கள் மற்றும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன.

Exams Daily Mobile App Download

கடந்த ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகளும், மே மாதத்தில் 40 அடிப்படை புள்ளிகள் என ரிசர்வ் வங்கி ரெப்கோ வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதன் படி வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களையும் உயர்த்தின. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகள் சமீபத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. மேலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஆகிய மூன்று வங்கிகள் ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கும் தற்போதைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் பேங்க்:

  • 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.40 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.40 சதவீதம்
  • 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம்
  • 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது: பொது மக்களுக்கு – 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.10 சதவீதம்
  • 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு – 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.80 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.85 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவானவர்கள்: பொது மக்களுக்கு – 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.95 சதவீதம்
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.30 சதவீதம்.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு பற்றி ஆன்லைன் மூலம் தகவல் – புதிய வசதி அறிமுகம்!

ஹெச்டிஎஃப்சி வங்கி:

  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.25 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.25 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.75 சதவீதம்
  • 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.75 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.25 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு – 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.15 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை: பொது மக்களுக்கு – 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.15 சதவீதம்
  • 1 ஆண்டு: பொது மக்களுக்கு – 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.85 சதவீதம்
  • 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.85 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.00 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.20 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.50 சதவீதம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.75 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 4.50 சதவீதம்
  • 180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு – 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.00 சதவீதம்
  • 1 ஆண்டு: பொது மக்களுக்கு – 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.80 சதவீதம்
  • 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 5.80 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.00 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.00 சதவீதம்
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு – 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.10 சதவீதம்
  • 1111 நாட்கள்: பொது மக்களுக்கு – 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 6.00 சதவீதம்

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!