மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – ரசிகர்கள் பாராட்டு மழை!

0
மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் - ரசிகர்கள் பாராட்டு மழை!
மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் - ரசிகர்கள் பாராட்டு மழை!
மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – ரசிகர்கள் பாராட்டு மழை!

தென் ஆப்பிரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான IND vs SA மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தனது 100வது விக்கெட்டை எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ரிஷப் பண்டின் 100 டிஸ்மிசல்ஸ்:

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரிஷப் பண்ட் 97 டிஸ்மிஸலை எடுத்துள்ள நிலையில் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் அவரது 100வது டிஸ்மிஸலை எடுக்க உதவுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முழுவதும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – கைரேகை கட்டாயமில்லை! அமைச்சர் அறிவிப்பு!

இரண்டாவது நாள் செஞ்சூரியனில் மழை பெய்து 2 ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி தொடருமா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. 3வது நாள் ஆட்டம் மழையின்றி தொடங்கப்பட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய அணி 327 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்பு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே பும்ரா பந்தில் ரிஷப் பண்ட் கையில் விக்கெட்டை கொடுத்தது. மீதம் 2 கேட்ச் அல்லது ஸ்டம்பிங் எடுத்தால் ரிஷப் பண்ட் தனது 100 டிஸ்மிஸல் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் வேகமெடுக்கும் ஓமைக்ரான் ! அரசின் முடிவு என்ன?

ரிஷப் பண்ட் 25 போட்டிகளில் 97 டிஸ்மிஸலை எடுத்துள்ளார். உலக கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக MS தோனி 36 போட்டிகளில் 100 டிஸ்மிஸலை எடுத்துள்ளார். தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஷமி ஒவேரில் அது நிறைவேறியது. ஷமி வீழ்த்திய 5 விக்கெட்களில் 3 விக்கெட் ரிஷப் பண்ட் கையில் கேட்ச் ஆனது. அதனால் மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பண்ட் புது சாதனை படைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here