இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

0
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது குரங்கு அம்மை நோய். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை:

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பரவி வந்த கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. மேலும் மக்கள் தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கி 90 நாடுகளில் பரவியுள்ளது.

இந்தியாவில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

இதுவரை நாடு முழுவதும் 29000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலை உலக சுகாதார நிறுவனம் உலக அவசர நிலையாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரேசிலில் இதுவரை 1700 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கேரளா, டெல்லி, ஆந்திரா என பல மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி, முதுகு வலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவை இருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதனால் குரங்கு அம்மை நோய் ஏற்பட்டவர்களில் 10ல் ஒருவர் இறக்க நேரிடும் என்றும் முறையான சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையம், துறைமுகங்களில் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து டெல்லியில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!