குறைந்தது அரிசி விலை..பொதுமக்கள் நிம்மதி – அரசின் நடவடிக்கை!

0
குறைந்தது அரிசி விலை..பொதுமக்கள் நிம்மதி - அரசின் நடவடிக்கை!

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரிசி விலை குறைவு:

2023 ஆம் ஆண்டில் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் பல அத்தியாவசிய பொருள்களுக்கான விலையும் அதிரடியாக உயர்ந்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்திருந்தது. கடத்த சில மாதங்களாக அரிசியின் விலையானது கிலோவிற்கு ரூபாய் 10 முதல் 15 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரது அதிகரித்துள்ளது.

IPL போட்டிகளில் மாற்றம்.. ரசிகர்கள் கவனத்திற்கு – காரணம் இது தான்!

கோடை விளைச்சல் சந்தைக்கு வர தொடங்கியுள்ளதால் தற்போது அரிசியின் விலையானது குறைய தொடங்கியுள்ளது. அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்து வருகிறது. இதன் படி ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரிசியின் விலை குறைவு தற்போது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!