தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜன.19 முதல் திருப்புதல் தேர்வு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வு கட்டாயம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண விதிகளில் மாற்றம்!

ஆனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் விதமாக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி மற்றும் பிரிஜ் கோர்ஸ் நடத்தப்பட்டு வந்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் கண்காணிப்பில் அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைப்பிக்கும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

அதனால் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அளித்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் ஜன.19ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here