தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் – திருப்புதல் தேர்வு மாற்றம்?
தமிழகத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், பள்ளிகளில் திருப்புதல் தேர்வும் நடைபெற உள்ளது. இந்த வகையில் தேர்வுகளை கண்காணிக்க ஆசிரியர்கள் இருக்க முடியாது. எனவே திருப்புதல் தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருப்புதல் தேர்வு
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் காரணமாக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளன. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தல் பணிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த வகையில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் பிளஸ்-1 மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அலகுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடங்கள் நடத்தி முடிக்காத நிலையில் முக்கிய பாடங்களில் இருந்து ஆசிரியர்கள் வினாக்கள் தயாரித்து வருகின்றனர். இந்த வகையில் பிளஸ்-1 மாணவர்கள் கடந்த 2 வருடங்களாக பொது தேர்வு எழுதாமல் அடுத்ததடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் திட்டம்! புலம்பெயர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
மேலும் நடப்பு ஆண்டு ‘ஆல்பாஸ்’ என அறிவிக்கப்பட்டால், பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படுவர் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் நாளை 10ம் தேதி பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அதே தினமே உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பும் நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் பலர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்குச் சென்றால் தேர்வைக் கண்காணிக்க இயலாது எனவே தேர்தல் பயிற்சி வகுப்பை, திருப்புதல் தேர்வு இல்லாத நாளில் நடத்த வேண்டும், இல்லை என்றால் தேர்வு நாளை மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறியுள்ளார்.