நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

0
நடிகர் விஜய்யின்
நடிகர் விஜய்யின் "பீஸ்ட்" படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பல ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ள நிலையில், இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பீஸ்ட் திரைப்படம்:

நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் இன்று வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து இருந்த இந்த படம் தற்போது வெளியாகி இருப்பதால் முதல் நாள் காட்சிகளை பார்க்க ஏகப்பட்ட மக்கள் குவிந்தனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான மூன்றாவது படம் இது. அவர் இயக்கிய டாக்டர், KoKo உள்ளிட்ட படங்கள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் இந்த படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் இருந்து விலகிய ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

ஹீரோ விஜய் வீரராகவன் கதாபாத்திரத்தில் இந்திய ராணுவ உளவாளியாக தோன்றி இருக்கிறார். காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய தீவிரவாதி ஒருவரை பிடிக்க திட்டமிடும் வீரராகவன் விஜய். ஆனால் அதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததால் அந்த முயற்சியை கைவிட ஆனாலும் அங்கே இருக்கும் தீவிரவாதிகளை அவர் துவம்சம் செய்ய அப்போது விஜய்க்கு நெருக்கமான குழந்தை இறந்துவிடுகிறது. அதனால் மனம் உடைந்த விஜய் அங்கிருந்து சென்னைக்கு வந்துவிட அங்கே பூஜாவுடன் காதல் வருகிறது. பூஜாவுடன் வெளியே சுற்றி கொண்டிருக்கும் போது ஒரு வேலையாக ஷாப்பிங் மால் ஒன்றிற்கு வருகிறார்.

அங்கு திடீரென தீவிரவாதிகள் மாலில் உள்ள மக்களை சிறை பிடிக்கின்றனர். வீரராகவனால் கைதான அந்த முக்கிய தீவிரவாதியை விடுவிக்க கோரிக்கை வைக்கின்றனர். அதில் இருந்து விஜய் மக்களை காப்பாற்றுவாரா என்பதே மீதி உள்ள கதையாக இருக்கிறது. வீர ராகவன் என்ற ஆர்மி கதாபாத்திரத்தில் விஜய் செம மாஸ் காட்டி இருக்கிறார். படத்தின் வெற்றிக்கு விஜய்யின் நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த படத்தில் பூஜா, VTV கணேஷ், செல்வராகவன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கலக்கி இருக்கின்றனர்.

நகைச்சுவைக்கு யோகி பாபு, Redin Kingsley ஆகியோர் இருந்தாலும் அவர்களுக்கு குறைவான காட்சிகளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாதி காமெடி ஆக்சன் என நெல்சனின் ரசனையுடன் இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் சுமாராக தான் இருக்கிறது. அனிருத் பாடல்கள் ஹிட் என்றாலும், BGM இல்லாமல் இருப்பது போல இருக்கிறது. மனோஜ் பரமஹாசவின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும் தற்போது பலரை ஏமாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!