வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Junior Assistant, Office Assistant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இறுதி நாளுக்குள் (30.04.2022) விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
தேனி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை வெளியிட்ட அறிவிப்பில் Junior Assistant பணிக்கு என 1 இடமும், Office Assistant பணிக்கு என 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Junior Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கணினி இயக்குபவர் பணியில் முன்அனுபவ சான்று வைத்து இருப்பவராக இருக்க வேண்டும். Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பெற்றவராக இருக்க வேண்டும்.
Jr. Assistant, OA பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். Jr. Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு மாதம் தோறும் ரூ.13,000/- ஊதியமாக வழங்கப்படும். Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு மாதம் தோறும் ரூ.9,100/- ஊதியமாக வழங்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 30.04.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும்.