தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

கேரளாவில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப் பணியில் உள்ளனர். அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.

பணி ஓய்வு

கேரள மாநிலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக இருக்கிறது. பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில், 60 ஆகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மண் சாண்டி 2011 – 16 வரை ஆட்சியில் இருந்த போது, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56 ஆக நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தார். தற்போது வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – போராட்டம் நடத்த முடிவு!

இந்நிலையில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு 2022 ஏப்.1 முதல் அமலானது. இந்தியாவில் வாசனை திரவிய பொருட்கள் சாகுபடி செய்யும் மாநிலமாக கேரளா உள்ளது. இங்குள்ள இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு போன்ற மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் தேயிலை, காபி, ஏலக்காய், ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் மட்டும் 1.5 லட்சம் ஏக்கரில் பயரிடப்பட்டுள்ளது. அங்கு தமிழர்களுக்கு சொந்தமான ஏலத்தோட்டங்கள் அதிக அளவில் உள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும் மூணாறில் 15 ஆயிரம் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் பிரபல தனியார் தேயிலை கம்பெனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் இந்த உத்தரவால் ஓய்வு பெறுவோரை மீண்டும் பணி அமர்த்துகின்றனர். இதனால் தொழிலாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக பூர்வீக தொழிலாளர்கள் அதிகமானோருக்கு தமிழகம், கேரளாவில் வீடுகள் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது நிர்வாகத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒப்படைத்தால் மட்டுமே ஓய்வூதியம் உட்பட சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!