அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62 ஆக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62 ஆக உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு ஊழியர்கள் பயன் பெறும் விதமாக, அவசர சட்டம் ஒன்றை திங்கள் கிழமை அன்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அம்மாநில அரசு ஊழியர்கள் சார்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பணி ஓய்வு வயது உயர்வு:

ஆந்திராவில் அரசுத்துறை அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோர் சம்பள விகிதம், ஒய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து முதன்மை செயலாளர் சமீர் ஷர்மா தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த வகையில் 2022 ஜனவரி 1 முதல் மாநில அரசு ஊழியர்களின், ஓய்வு வயதை 60லிருந்து 62 ஆக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கட்கிழமை வெளியிட்டார்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு!

மேலும் அரசு ஊழியர்களின் அனுபவம் அரசுக்குச் சொத்தாகக் கருதப்படுவதாகவும், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் சேவைகளை, அரசு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த வகையில் முதல்வர் ஜெகன்மோகனின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய திருத்த ஆணையத்தின் படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாகவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான (CPS) காலக்கெடுவை அறிவித்தது.

TCS நிறுவனத்தில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் இந்த அறிவிப்புக்கு இளைஞர் சார்பில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது வேலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் ஓய்வு பெற்றால் அந்த காலிப்பணியிடங்களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!