தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது அதிகரிப்பு – 1.75 லட்சம் காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!

0
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது அதிகரிப்பு - 1.75 லட்சம் காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது அதிகரிப்பு - 1.75 லட்சம் காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது அதிகரிப்பு – 1.75 லட்சம் காலிப்பணியிடங்கள் உருவாக்கம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று மட்டும் 25000 பணியாளர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதன் மூலமாக தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த தகவலை பற்றி விரிவாக பார்ப்போம்.

காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து விதமான போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நிதி நிலையை சீரமைக்க அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது.

அதாவது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இது பல வருடங்களாக அரசு வேலைக்கு காத்திருந்து இளைஞர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்றில் முதல் முறையாக அரசு அலுவலகங்களில் 25000 பணியாளர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளனர். அத்துடன் வரும் கல்வியாண்டில் மேலும் சில ஆசிரியர்கள் பணி நிறைவு செய்ய உள்ளார்கள். அதனால் அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக போட்டித்தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால் அரசு துறைகளில் இதுவரை 1,50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்றுடன் 30க்கும் மேற்பட்ட துறைகளில் 25000 பணியிடங்கள் காலியாகிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தமாக 1.75 லட்ச காலிப்பணியிடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here