தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு – முதல்வர் முக ஸ்டாலின் சொல்வது என்ன?

0
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு - முதல்வர் முக ஸ்டாலின் சொல்வது என்ன?
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு - முதல்வர் முக ஸ்டாலின் சொல்வது என்ன?
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறைப்பு – முதல்வர் முக ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழக முதல்வர் நேற்று டெல்டா பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். பின்னர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள், முதல்வரிடம் ஏராளமான கேள்விகளை கேட்டனர். அப்போது ஓய்வூதிய வயதைக் குறைக்க திட்டமா? என்ற கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

முதல்வர் விளக்கம்:

நேற்று முன்தினம் தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு பணிக்காக முதல்வர் ஸ்டாலின் சென்றார். அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டார். மேலும் ஆய்வு பணிகளை செய்துவிட்டு சென்னை திரும்புவதற்காக அவர் திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, டெல்டா பயணம் மகிழ்ச்சியாக இருந்தது. உழவர்களுக்கு ரூ.61 கோடி மதிப்பில் வேளாண் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று பள்ளிகள் திறப்பு!

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்பே டெல்டாவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கிறாரே அதற்கு என்ன பதில் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார், அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், நானும் ஒருவன் இருக்கிறேன் என்பதை மக்களுக்கு காட்ட ஒவ்வொரு நாளும் எதையாவது அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை. இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றன என்றார். மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 27,000 பேர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றுள்ளனர், இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயதை( 60 லிருந்து 58 ஆக) குறைக்க திட்டம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த முதல்வர் இப்போது முடிவு எடுக்கவில்லை. பேசிக்கொண்டு இருக்கிறோம். முடிவு எடுத்த பின் அறிவிப்போம், என்று தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here