தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பல அரசு தரப்பு கூடுதலான பலன்களும் தடைபட்டு கிடக்கும் இந்த நிலையில், தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் கூடுதலாக ஒரு புதிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வரின் திட்டம்:

கடந்த 2020ம் ஆண்டு தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா முதல் அலையின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு வகையான போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மற்ற துறைகளும் முடங்கியதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டது. இதனால் மக்கள் மட்டுமில்லாமல், அரசும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது முன்னதாக 58 ஆக இருந்தது. ஊழியர்கள் ஓய்வு பெறும் சமயத்தில் அவர்களுக்கான ஓய்வூதிய பலன்களை அரசு வழங்க வேண்டும். ஆனால் அரசு அப்போதைய சமயத்தில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்ததால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆகவும், அதே நிலை அடுத்த ஆண்டும் நீடித்த காரணத்தால் 60 ஆகவும் அதிமுக தலைமையிலான அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Exams Daily Mobile App Download
இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை வரும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறும் வகையில் பத்திரமாக எழுதி தருவதாக அரசு தெரிவித்ததை அரசு ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் பணியில் நீடிக்கும் நிலை உள்ளது. தற்போது மாநில அரசுக்கான ஒதுக்கீடு மத்திய அரசு சார்பில் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் தற்போதும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது நீடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு சரியான சமயங்களில் அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இதேபோல் மாநில அரசு ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர். மாநில அரசின் நிதி பற்றாக்குறையால் இவை முறையாக மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் மாநில அரசு தனது ஊழியர்களின் அதிருப்திக்கு உள்ளாகிறது. தற்போதைய நிதி நிலையை சமாளிப்பது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மிகவும் மந்த நிலையில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்  வீணான முறையில் ஏற்படும் செலவுகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here