ரூ.100 லஞ்சம் பெற்றவருக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை – லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
ரூ.100 லஞ்சம் பெற்றவருக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை - லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ரூ.100 லஞ்சம் பெற்றவருக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை - லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ரூ.100 லஞ்சம் பெற்றவருக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு சிறை தண்டனை – லக்னோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உத்தரபிரதேச மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டில் 100 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என்பவர் மீதான வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. அதன்படி 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவருக்கு லக்னோ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.

லஞ்ச வழக்கு:

உத்தரபிரதேச மாநிலத்தில் (1991) 32 ஆண்டுகளுக்கு முன்பாக வடக்கு ரயில்வேயில் பணியாற்றிய ஓய்வு பெற்றவர் ராம்குமார் திவாரி என்பவர் மருத்துவ சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்திற்கு வந்த போது ராம் நாராயணன் வர்மா என்பவர் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் இவர் முதலில் 150 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளதாகவும் அதன் பின்னர் 100 ரூபாய் என குறைத்துள்ளதாகவும் திவாரி புகார் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அத்துடன் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட பிறகு, ராம் நாராயணன் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது ராம் நாராயணன் (82) தரப்பில், இவர் வயது மூப்பு காரணமாக தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒன்றியங்களே ஆவின் பால் பாக்கெட் விலையை உயர்த்த தடை? அரசுக்கு வேண்டுகோள்!

இதற்கு லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ராம் நாராயணனின் வயது மூப்பு காரணமாக இவருக்கான தண்டனையை குறைத்து வழங்க முடியாது என்றும் இது மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். அதனால் ராம் நாராயணனுக்கு லஞ்சம் பெற்றதற்காக ஓராண்டு சிறை தண்டனையும் ரூபாய் 15,000 அபராதமும் செலுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!