TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ரிசல்ட் & கட் ஆஃப் மார்க் குறித்த விவரங்கள் இதோ!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - ரிசல்ட் & கட் ஆஃப் மார்க் குறித்த விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - ரிசல்ட் & கட் ஆஃப் மார்க் குறித்த விவரங்கள் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ரிசல்ட் & கட் ஆஃப் மார்க் குறித்த விவரங்கள் இதோ!

தமிழகத்தில் கடந்த மே 21ம் தேதியன்று நடைபெற்ற TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்வர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் எத்தனை மதிப்பெண்கள் எடுத்தால் மெயின் தேர்வுக்கு படிக்கலாம் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

குரூப் 2 தேர்வு:

தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று நிமித்தம் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு TNPSC குரூப் 2 தேர்வானது ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கடந்த மாதம் 21ம் தேதியன்று நடத்தப்பட்டது. அந்த வகையில் சுமார் 5529 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 11 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இப்போது தேர்வு எழுதிய அத்தனை பேரும் அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஏனென்றால் TNPSC குரூப் 2 முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து நடக்கும் மெயின் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதால் தேர்வு முடிவுகளை நோக்கி காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் குரூப் 2 தேர்வுக்கான முடிவு வெளியாகும் என்றும் முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட் ஆஃப் மதிப்பெண்கள்:

பொது விண்ணப்பதாரர்:

      • ஆண்கள் – 161 மதிப்பெண்கள்
      • பெண்கள் – 158 மதிப்பெண்கள்

BC விண்ணப்பதாரர்கள்:

      • ஆண்கள் – 159 மதிப்பெண்கள்
      • பெண்கள் -157 மதிப்பெண்கள்

MBC விண்ணப்பதாரர்கள்:

      • ஆண்கள் – 156 மதிப்பெண்கள்
      • பெண்கள் -154 மதிப்பெண்கள்

SC விண்ணப்பதாரர்கள்:

      • ஆண்கள் – 153 மதிப்பெண்கள்
      • பெண்கள் -150 மதிப்பெண்கள்

ST விண்ணப்பதாரர்கள்:

      • ஆண்கள் – 144 மதிப்பெண்கள்
      • பெண்கள் -140 மதிப்பெண்கள்
தேர்வு முடிவுகளை சரிபார்க்க:
  • முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • முகப்புப்பக்கத்தில் வலது புறத்தில் உள்ள “WHATS NEW” என்பதில் குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கும்.
    Exams Daily Mobile App Download
  • தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளுக்கான இணைப்பை தேடி கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுக்கவும்.
  • பின்னர் SUBMIT பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது, புதிய பக்கத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!