ஆகஸ்ட் 8ம் தேதி 23 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – ஆட்சியர் உத்தரவு!

0
ஆகஸ்ட் 8ம் தேதி 23 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 8ம் தேதி 23 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் உத்தரவு!
ஆகஸ்ட் 8ம் தேதி 23 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது – ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று 23 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்கும் முயற்சியாக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. கடந்த மாதத்தில் கொரோனா குறைந்து வந்த போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை தொடர்ந்து நீட்டிப்பு செய்தது. ஆனாலும் கொரோனா பரவல் முழுமையாக குறையவில்லை. கடந்த சில தினங்களாக கோவை, சென்னை, சேலம் போன்ற மாவட்டங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – பிரிட்டன் அரசு அறிவிப்பு!

இந்த நேரத்தில் ஆடி 18ம் பெருக்கு, கிருத்திகை போன்ற விசேஷ தினங்களை முன்னிட்டு கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவது இல்லை. திருச்செந்தூர், திருத்தணி போன்ற பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்வர். இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

TN Job “FB  Group” Join Now

மீண்டும் தொற்று அதிகமாக வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் அம்மாவட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று 23 கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சித்தோடு காளிங்கராயன் அணைக்கட்டு, மலயம்பாளையம் காரணம்பாளையம் அணைக்கட்டு ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் கூடவும், ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!