அமெரிக்காவில் H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து – அரசு அறிவிப்பு!

0
அமெரிக்காவில் H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து - அரசு அறிவிப்பு!
அமெரிக்காவில் H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து - அரசு அறிவிப்பு!
அமெரிக்காவில் H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து – அரசு அறிவிப்பு!

அமெரிக்க அரசின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை பார்க்கும் மற்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

H1 B விசா:

அமெரிக்காவில் முந்தைய ஆட்சியில் இருந்த அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டில் தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் மிக முக்கியமானது H1 B விசா. அதாவது அமெரிக்காவில் பணி நிமித்தமாக தங்கி இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு H1 B மற்றும் H 4 உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன.

நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் உயிரிழப்பு – கொரோனா 2ம் அலை தீவிரம்!

இந்த H1 B விசா மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்து வந்தனர். இந்த விசாக்களை பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் ஊழியர்களுக்கு டிரம்ப் தலைமையிலான அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பரவல் காரணமாக H1 B விசாவை பயன்படுத்துவதற்கு அந்நாட்டில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து அமெரிக்காவில் தற்போது ஆட்சியமைத்துள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு, H1 B விசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க குடியேற்றத்துறை நேற்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த H1 B விசாவுக்கான கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!